Monday, May 17, 2010

Sunday, May 9, 2010

சுஜாதா உயிர்மை விருது

ஒவ்வொரு விருது கொடுக்கும் போதும் அதற்கு எப்படி தேர்ந்தெடுப்பாங்கன்னு அடிக்கடி யோசிப்பதுண்டு. இதில் கலைஞர் வாங்குகிற விருதை எல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அது கொடுப்பவர்களின் தேவையை பொறுத்தது.

உயிர்மை சுஜாதா விருது அறிவித்ததிலிருந்து ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. உயிர்மை அதுவும் சுஜாதா பெயரால் கொடுக்கப்படும் விருது, யாருக்கு கொடுக்கப்படும் என்ற ஆர்வத்திற்கு ஆப்பு வைத்தார் எஸ்ரா. விருது வாங்கிய அந்த பொண்ணுதான் ரொம்ப மொக்கையா எழுதுமென்றால், இவர் எப்படி இந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார் என்று அவர் கொடுக்கும் விளக்கம் அதைவிட மொக்கையாக இருந்தது.

கணினி துறையில் வேலை பார்த்துக்கொண்டே, இணையத்திருக்கும், இலக்கியத்திற்கும் அந்த அம்மணி ஆற்றிய சேவையை சிலாகித்திருந்தார். இன்று இணையத்தில் படிக்கும் முக்கால்வாசி மொக்கை வலைப்பூக்களை எழுதுவது கணினி துறையில் வேலை பார்ப்பவர்களே. இவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, இணைய தளங்களை படிப்பதோடு மட்டுமில்லாமல், பதிவு என்ற பெயரில் படிப்பவர்களை மண்டை காய வைக்கிறார்கள்.

சுரேஷ் கண்ணன், லக்கி லுக் போன்ற பல நல்ல பதிவர்கள் இருக்கும்போது, இவருக்கு கொடுத்தது ஏதோ உள் குத்து வேலையோ என்று தோன்றுகிறது.

கலைமாமணி விருதைப் போல் இந்த விருதும், தேர்ந்தேடுப்பவர்களுக்கு சம்சா அடிப்பவர்களுக்கே கிடைக்கும் போலிருக்கு.

Sunday, May 2, 2010

அறிமுகம்

இருக்கிற பதிவர்கள் இம்சைகள் போதும் என்னையும் பதிவன் ஆக்காதே என்று பள்ளிகொண்ட பெருமாளை ரொம்ப நாள் வேண்டிகொண்டிருந்தேன். ஆனா இந்த பதிவுகளையெல்லாம் படிச்சுட்டு மண்ட காஞ்சு போச்சு. வேண்டுதலை வாபஸ் வாங்கிகிட்டு, நானும் களத்தில குதிச்சுட்டேன். பதிவு போடுறதவிட, மொக்க பதிவுக்கு சக்கையா பின்னூட்டம் போடவே இந்த முடிவு.